Home

சிபிச்செல்வன் கவிதைகள்

Wherever you go                                                                                                      

 our network follows

 you

சற்றுமுன் எழுதிய கவிதை

கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனது

திருவல்லிக்கேணியிலிருந்து

பதின்முன்றாம் எண் பேருந்தில் ஏறும்போது

மிகச்சரியாக இருந்தது

சற்றுமுன்வரை இருக்கையில் சாய்ந்திருந்தவனும் வாசித்தான்

அண்ணாசாலையில் நுழைந்தவுடன்

அலையடித்த குளமெனக் கலங்கியது கவிதை

ஜெமினி மேம்பாலத்தில் துப்பாக்கிகளுடன் காவலர்கள்

கண்காணிப்பதையறிந்த கவிதை ஒரு மாய

மந்திரவாதியைப்போல மறைந்தது.

அமெரிக்கன் துதரக வளாகத்தில் மஞ்சள் பூக்கள்

பூத்திருந்தன.அதை ரசிக்காமல் மாயமாய் மறைந்து போயிருந்தது                   அக்கவிதை.

எனக்கும் அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.

துப்பாக்கியேந்திய காவலர்கள் சதா கண்காணித்தவாறேயிருக்கிறார்கள்

மிரண்டுபோன கவிதை இம்மாநகரில் ஏதாவதொரு பகுதியில்

நிம்மதியாகவும் இருக்கலாம்.

பதின்முன்றாம் எண் பேருந்தினுள் ஏறும்போது என்னை எச்சரித்தது கவிதை,,,,

கவிதையே,,,, கவிதையே,,,,,

சற்றுமுன் மாயமாய் மறைந்து போன கவிதையே

இன்னம் இம்மாநகர எல்லைக்குள்தான் இருக்கிறாயா–.

சீருடையணிந்த காவலர்களின் துப்பாக்கிகள் சுழல்கின்றன

முந்நுற்று அறுபது கோணங்களிலும்

ஜெமினி மேம்பாலத்திருந்த விளம்பர வாசகம்

உரக்கக் கூச்சலிடுகிறது

Wherever you go our network follows you

பின்னூட்டமொன்றை இடுக