Home

 

 

மூலிகை மருந்து

 

மூலிகை மருந்து எனச் சொன்னால் யாரும்  கேட்பதில்லை. ஆங்கில மருத்துவ முறை வந்ததும் அதுதான் ஓஸ்தி என்ற மனப்பாங்கு எப்படியோ நம் மக்களிடம் மனதில் நன்றாகப் பதிந்து விட்டது, அதன்விளைவு நம்முடைய பரம்பரை வைத்திய முறைகளை நாம் இழந்து வெகு வருடங்கள் ஆகி விட்டன.

நம் வீட்டைச் சுற்றி தோட்டம் இருந்த காலத்தில் கீரைகள் என்பதின் முக்கியதுவத்தை நாம் உணரவில்லை.. ஒரு மூலிகைக்கு பேர் பாருங்கள் குப்பைமேனி… நாம் குப்பை என நினைத்து பல செல்வங்களைக் குப்பையில் போட்டிருக்கிறோம்.

ஆங்கில வைத்தியம் செய்வதற்கு ஆடம்பரமான விளம்பரங்கள், மருத்துவர்கள் ,கட்டடங்கள், தாதிகள் என நவீன தோற்ற மயக்கத்திலிருந்து நாம் எப்போது விடுபட போகிறோம். இந்த மாயக் கவர்ச்சி நம் செல்வத்தின் வளத்தை நமக்குத் தெரியாமலே கொள்ளையடிக்கும் என்பதை நாம் அறியாமலேயே இருக்கிறோம்.

இரண்டு நாளுக்குமுன் சேலம் நகரத்தின் ஒரு  முக்கியமான சந்திப்பில் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் மூலிகைகளைப் பாதையோரத்தில் பரப்பி வைத்துக்கொண்டு ஒரு சிறு மைக்செட்டின் வழியாகக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தார் மூலிகைச் சாறு.

அதற்கும் ஒரு கூட்டம் அவரைச் சுற்றிக் கூடியிருந்தது. தெருவில் வித்தை காட்டினாலும் ஒரு கூட்டம் இன்னும் கூடிக்கொண்டுதான் இருக்கிறது. அவரைச் சுற்றியிருந்த கூட்டத்தில் சிலர் அவரின் சொல்லில் மயங்கி அல்லது மூட்டு வலியின் அவஸ்தையிலிருந்து விடுபட எண்ணியோ அவரிடமிருந்து மூலிகைச் சாற்றை வாங்கி உடலில் தேய்த்துக் கொண்டு அடுத்த நொடியே வலி போய்விட்டதாக நம்பி மூலிகைச் சாறு அடங்கிய பாட்டிலை இருபது ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு போனார்கள்.

இங்கே கொட்டி வைக்கப்பட்டிருந்த மூலிகைகளில் பல இப்போதும் கூட நம் வீட்டைச் சுற்றி இருக்கிறது,  ஆனால் அவற்றை நாம் பயன்படுத்துவதில் உள்ள கௌரவக் குறைச்சல் அல்லது மனத்தடை அல்லது அவை  எல்லாம் நம்மைச் சுற்றி சாதாரணமாக கிடைப்பது தானே என்ற அலட்சிய மனோபாவம். இந்த மனோபபாவம்தான் நம்முடைய பல நோய்களுக்கு காரணம் என்பதுகூட அறியாதா அறியாமையில் நாம் இருக்கிறோம். இந்த அறியாமையால் பல லட்சக்கணக்கான ரூபாய்களை நாம் இழப்பதோடு நம்முடைய ஆரோக்கியத்தையும் இழக்கிறோம்.

தெருவில் விற்கும் மூலிகைச் சாறு வாங்கித் தேய்ததுக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. தினசரி நம்முடைய உணவில் ஒரு கீரையைச் சேர்த்துக் கொண்டாலே பல நோய்கள் நம்மை அண்டாது. பல  வருடங்களுக்குமுன் ஒரு பிரபல தொலைக்காட்சியில் வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான் தினசரி கீரைகளைப் பற்றிய ஒரு உரையைக் கொடுத்தார். அதன் விளைவாகக் கீரையின் பயன்பாட்டைக் கொஞ்சம் பேர் அறிய ஆரம்பித்தார்கள். ஆனால் இப்போதும் கீரைகளைப் பற்றியும் மூலிகைகளைப் பற்றியும் அறியாதவர்கள் ஏராளம்.

தினம் ஒரு கீரை நம் உணவில் பயன்படுத்தும் வழக்கம் மெல்ல நம் எல்லோருக்கும் வந்து விட்டால் நம் வாழ்வில் ஆரோக்கியம் நிரந்தரம். வலிகளின் வேதனையிலிருந்து நாம் விடுபடலாம். முதலில் ஆங்கில மருத்துவ மோகத்திலிருந்து விடுபட வேண்டுமானால் மாற்று  மருத்துவ முறைகளைப் பற்றிய முறைகளையும் நாம் அறிந்தது கொள்ள வேண்டும்.

அதன் முதல் படிதான் நம்மைச் சுற்றியுள்ள மூலிகை மருந்துகளை உபயோகப்படுத்தும் முறைகளை அறிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவது.

அது மிகவும் எளிது,

தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரையைச் சேர்த்துக்கொள்வது. அதை இன்றே நாம் தொடங்கி விடுவோம்.

நம் நோய்கள் எல்லாம்  போயே போச்சு

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s