Home

 

அறிவிப்பு 

நண்பர்களே ஆழி பதிப்பக நண்பர் செ.ச .செந்தில் நாதன் இந்த அறிவிப்பைக் கொடுத்திருக்கிறார்.  இதுபோல நண்பர்கள் நடத்தும் இலக்கிய கூட்டங்கள் , புத்தக வெளியிடுகள், இலக்கிய தகவல்கள் போன்றவற்றை அனுப்பி வைத்தால் என் வலைத்தளத்தில் இந்த அறிவிப்பு பகுதியில் வெளியிடலம்.

 

 

 

வணக்கம்

தமிழ் நாட்டின் அனைத்து நகரங்களையும் குறித்து எனது ஊர் என்கிற
நூல்வரிசை ஒன்றை ஆழி பதிப்பகம் தொடங்கி இதுவரை ஏழு நூல்களை
வெளியிட்டிருக்கிறது.

64 பக்கத்தில், கூடுதலாக எட்டு பக்க வண்ணப் படங்களுடன், ஒரு ஊரின்
வரலாற்றையும் இன்றையை நிலையையும் அந்த ஊரின் மக்களுக்கும் பிறருக்கும்
எளிமையாக ஆனால் முழுமையாக அறிமுகப்படுத்துவதே இந்த நூல்வரிசையின்
நோக்கம்.

இந்த நூல்வரிசையில் சுமார் 200க்கும் மேற்பட்ட நூல்கள் வரவுள்ளன. இதற்காக
எங்களுக்கு நூலாசிரியர்கள் தேவை. சொந்த ஆக்கமாகவும் வேறு பல முக்கிய
ஆய்வு, தகவல் ஆதாரங்களிலிருந்து தொகுப்பதாகவும் இந்த நூலாக்கம் அமையும்.
அதாவது நூலாசிரியர், எடிட்டர் ஆகிய இரு பணிகளையும்
செய்யவேண்டியிருக்கும்.

வரலாற்று ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு இந்த
பணி பொருத்தமாக இருக்கும். நூலாக்கம் குறித்து முழுமையான அறிமுகத்தையும்
வழிகாட்டலையும் ஆழி செய்யும்.

இதற்கான எனது ஊர் நூல்வரிசை நூலாசிரியர் வழிகாட்டல் சந்திப்பு வரும்
ஏப்ரல் இரண்டாம் சனிக்கிழமை (14.4.2012) சென்னையிலுள்ள ஆழி அலுவலகத்தில்
நடக்கவுள்ளது. இது தொடங்கி ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை
தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களில் வழிகாட்டல் சந்திப்புகள் நடக்கும்.

விருப்பம் உள்ளவர்கள் எனது zsenthil@gmail.com முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.

நாங்கள் எதிர்பார்க்கும் நூலாசிரியர்களுக்கு வரலாறு, அரசியல், சமூகம்,
கலாச்சாரம், பொருளாதாரம், இயற்கை என பலதுறை ஆர்வமும் அத்துறைகளில்
உள்ளவர்களோடு இணைந்து செயல்படக்கூடிய ஆர்வமும் தேவை. இந்த நூலை எழுத ஒரே
நிபந்தனை நூலாசிரியர் அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்களாக அல்லது அந்தந்த ஊரில்
வசிப்பவர்களாக இருக்கவேண்டும்.

ஒரு ஊருக்காக அல்லாமல், பல்வேறு ஊர்களுக்காக உரிய தகவல்களை அளிக்க
விரும்பும் துறைசார்ந்த நிபுணர்களும் நூல்வரிசை ஆலோசகர் குழுவில் இடம்
பெற வரவேற்கப்படுகிறார்கள்.

இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஏப்ரல் இரண்டாம் சனிக்கிழமை கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு இதுவரை
வெளிவந்த எனது ஊர் நூல்வரிசை நூல்கள் சில மாதிரிக்காக வழங்கப்படும்.
வருபவர்கள் உடனே முன்பதிவு செய்துகொள்ளவும்.

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை
இடம்: ஆழி பப்ளிஷர்ஸ், 1ஏ, திலகர் தெரு, பாலாஜி நகர், துண்டலம்,
அய்யப்பன் தாங்கல், சென்னை 77.

(அய்யப்பன் தாங்கல் பஸ் டிப்போவுக்கு எதிரில் செல்லும் ஆயில் மில்
சாலையில், அடையார் பேக்கரியிலிருந்து மூன்றாவதாக இடது பக்கம் திரும்பும்
தெருவின் கோடி).

பங்குபெறுவோர் சென்னை கே கே நகரிலிருள்ள டிஸ்கவரி புக் பேலசுக்கு காலை
9.30 க்குள் வரவும். அங்கிருந்து அய்யப்பன் தாங்கலில் உள்ள ஆழி
அலுவலகத்துக்கு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
பங்குபெறுவோர்க்காக நண்பகல் உணவுக்கும் நொறுவைகளுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கிறது.

இந்தப் பதிவை, ஃபேஸ்புக், மின்னஞ்சல்கள், வலைப்பதிவுகள் உள்ளிட்ட சமூக
வலைத்தளங்களின் மூலமாக முடிந்த அளவுக்கு பிற நண்பர்களுடன்
பகிர்ந்துகொள்ளவும்.

அன்புடன்
செ.ச.செந்தில்நாதன்
பதிப்பாளர்
ஆழி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s