Home

அறிமுகம் 361 டிகிரி இலக்கிய இதழ்

361 டிகிரி இலக்கிய இதழின் மூன்றாம் இதழ் வெளிவந்துவிட்டது. கடந்த இரண்டு இதழ்களை உருவாக்கியது போலவே மிகச் சிறப்பாகவும் , கவனமாகவும்  இதழ் உருவாகி வெளி வந்துள்ளது. வழக்கம்போலவே கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இதழில் 26 பேரின் கவிதைகளை பிரசுரித்துள்ளார் நிலா ரசிகன். (  கடந்த இதழில் 18 பேரின் கவிதைகள் ).

கவிஞர்களில் இப்போது மிகத் தீவரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இலங்கை கவிஞர்கள் றியாஸ் குரானா,அனார்,தீபச்செல்வன்,  தமிழக கவிஞர்களான அய்யப்ப மாதவன்.வா.மணிகண்டன்,ந.பெரியசாமி,வேல் கண்ணன்,நேசமித்திரன் போன்றவர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

ஜே.பி.சாணக்யாவின் 20 பக்க சிறுகதையோடு நான்கு சிறுகதைகள் இதழில் இடம் பெற்றிருக்கின்றன.இளம் படைப்பாளியான ஆத்மார்த்தியின் கதையும் உள்ளது.

இரண்டு மொழி பெயர்ப்பு படைப்புகளும் இடம் பிடித்துள்ளன. அவற்றில் அனைவருக்கும் தெரிந்த பெயரான ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில் ஒரு சிங்கள கவிதை உண்டு. அத்தோடு சித்தார்த்  வெங்கடேஷ், ரோபர்டோ யூரோஸ்ஸின் வெர்ட்டிகள் பொயம் ஒன்றையும் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது.

இரண்டு கட்டுரைகளில் ஒன்று யவனிகா ஸ்ரீராம் சமகால கவிதைகளைப் பற்றிய கட்டுரை ஒன்றை வழக்கமான அதே பாணியில் எழுதியுள்ளார்.மற்றொன்று கொற்றவையால் எழுதப்பட்டுள்ள சினிமா குறித்த கட்டுரை.

நிலா ரசிகன் ஏற்பாடு செய்த தேரி நிகழ்வில் கவிதை பற்றிய உரையாடல் பதிவை கவிஞர் ஆத்மார்த்தி எழுதியுள்ளார்.

கடந்த இரண்டு இதழ்களையும் நிலா ரசிகன், நரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வந்தார்கள். இந்த இதழை நிலா ரசிகன் தனியாகவே தந்திருக்கிறார். இலக்கிய  இதழைத் தனியாக வெளியிடுவது ஒரு சவாலான பணி . இதை நிலா ரசிகன் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார். அவரின் பணியைப் பாராட்டும்விதமாக நாம் 361 டிகிரி இலக்கிய இதழுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். இதழ் வேண்டுவோர் நிலா ரசிகனின் அலைபேசியிலோ அல்லது இமெயில் முகவரியிலோ தொடர்பு கொள்ளும்படி வேண்டுகிறேன்.

•••

இதழில் இடம் பெற்றிருப்பவரின் விரிவான பட்டியல் இது

கவிதை

 

 • செல்மா ப்ரியதர்சன்
 • நித்தியா வீரராகு
 • ராணி திலக்
 • கதிர்பாரதி
 • தேன்மொழி தாஸ்
 • வேல்கண்ணன்
 • வா.மணிகண்டன்
 • றியாஸ்குரானா
 • அனிதா
 • தேனப்பன்
 • பத்மபாரதி
 • பொன்.வாசுதேவன்
 • சாகிப்கிரான்
 • விஷ்ணுபுரம் சரவணன்
 • ந.பெரியசாமி
 • சம்யுக்தா
 • சாம்ராஜ்
 • தீபச்செல்வன்
 • ஈஸ்வர சந்தானமூர்த்தி
 • அனார்
 • நேசமித்ரன்
 • நிலாரசிகன்
 • க.அம்சப்ரியா

அஅய்யப்ப மாதவன்

சிசிவன்

ஸ்வாதி  ச.முகில்

மொழிபெயர்ப்பு

 

 • சித்தார்த் வெங்கடேசன்
 • ரிஷான் ஷெரீப்

 

கட்டுரை

யவனிகா ஸ்ரீராம்

கொற்றவை

 

சிறுகதை

 

ஜே.பி.சாணக்யா

அதிரதன்

ஆத்மார்த்தி

த.அரவிந்தன்

 

நிகழ்வு

தேரி கவிதையுரையாடல்

 

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம்,பெருஞ்சித்திரன்

ஆசிரியர்: நிலாரசிகன்

97910-43314 nilaraseegan@gmail.com

விலை:50

•••

இதழில் வெளியான றியாஸ் குரானாவின் கவிதை ஒன்றை நம் வாசகர்களின் வாசிப்பிற்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இரவுக் காவலாளி

றியாஸ் குரானா

இரவை எழுதிக்கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு எழுத்தாக
இருள் பரவிக்கொண்டிருக்கிறது
இருளைப் பின்தொடர்ந்து அமைதியும்,
சலனம் நிரம்பிய சூழலும்
உருவாகத் தொடங்கிட்டதுவாசித்துக்கொண்டிருப்பதில் சிலர்
உறங்கியும்விட்டனர்
சிலர் இரவுணவை பரிமாறிவிட்டு
அதோ படுக்கைக்குச் செல்கின்றனர்மதிப்புக்குரிய திருடர்கள்
சொற்களுக்குள் மறைந்து
ரகசியமாக நடமாடத் தொடங்குகின்றனர்எல்லோரும் விழித்திருப்பதைப்போல
ஒரு தோற்றத்தை உருவாக்கி
திருடர்களைச் சலிப்படையச் செய்கிறேன்.

நள்ளிரவைக் கடந்து செல்கையில்
உறக்கமற்றுத் தவிக்கும் பலரை
சந்திக்க வேண்டிவருகிறது
இரவின் ஆற்றலை
இன்னும் ஆழப்படுத்தி,
அவர்களையும் உறங்கவைத்த சந்தோசத்தில்
சற்று இளைப்பாறும்போதுதான்
என்னருகில் அவன் வந்து நின்றான்.

வழிநடத்தும் என்னைக்கூட
உறங்கவைக்கும் சக்திகொண்ட இரவில்
அவன் விழித்திருந்தான்
எப்படியெல்லாமோ இரவைச் சரிசெய்தும்
அவனை உறங்கவைக்க
எனதிரவால் முடியவில்லை.

இரவின் அகச் சூழல்
விழித்திருக்க முடியாமல்
என்னை உறங்க வைத்துவிடது
கண்விழித்தபோது,
அந்த இரவின் தலைப்பில்
அவன் உட்கார்ந்திருந்தான்.

 •••
வேல்கண்ணனின் கவிதை இது வாசியுங்கள்
நீ வராத மாலை 
வேல் கண்ணன்
நீ வராத மாலை
வெயில் பாயை உதறி சுருட்ட
தொடங்கிவிட்டது
கையசைக்காமல் பறந்து சென்றது
பறவை கூட்டம்
நீர்த்து போன இறுதி சொட்டும் உறுதிப்படுத்தியது
நகர்ந்து வந்த இந்த நாளை நரகமாய்
வெந்து கொதித்த பொழுதுகள்
துளிர்த்த சில பூக்களையும் பிராண்டின
கண் தெரியாத பாலியம் நடுநிசியின்
கூரிய நகங்களால்  விரட்டி அடிக்கப்பட்டது
எனது
வனத்தின் எல்லை பகுதியிலிருந்த
நெடுமரங்களும் நிலாக்களும் சரிந்தன
துரோகத்தின் கருகல் நாசியை தொட்டன
வேற்றுஆட்களின் நடமாட்டம் தெரிகிறது
உன்
சுகந்த விழிகள் உழுத பாறைகளில்
சுரக்கும் பாலில் பொடித்து
பருகுவேன்

நஞ்சான இந்த
காத்திருத்தலை.
****
மிகத் தீவிரமாக கவிதைகளை எழுதிவரும் ந.பெரியசாமியின் கவிதை ஒன்றை உங்களின் வாசிப்பிற்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சந்திப்பு
-ந.பெரியசாமி

அவசரமாக தொலைக்காட்சிப்பெட்டியை அப்புறப்படுத்தினேன்
டேபிளை முன் அறைக்கு இழுத்து வந்தேன்
சன்னல் திரைத்துணியை உருவி விரித்தேன்
என்றோ ஒருவனின் பசியாற்றி
பரணில் கிடந்த பிளாஸ்டிக் பூந்தொட்டியை
சுத்தமாக்கி மையத்தில் வைத்தேன்
எதிரெதிராக இரு சேர்களை இழுத்துப் போட்டேன்
ஒன்றின்மீது பூனை வந்தமர்ந்தது
சிறிது நேரம் கழிய காக்கையும்
பூனை துள்ளிக் குதித்து சிரித்தபடி
நேற்றென் காதலி மிகவும் கொஞ்சினாள்
மரியாதைக்குரியவர் தழுவி பாராட்டினார்
நண்பர்களும் வியந்து வியந்து மகிழ்வித்தார்கள்
இடைவிடாது பேசிக்கொண்டிருக்க
காக்கை இடைமறித்து
எனக்கும் இப்படியெல்லாம் வாய்க்குமா
பிணங்கிய காதலி  எனையடைவாளோ
முகமறிந்த முகமறியா நண்பர்களும் போற்றக் கூடுமோ
கேள்விகளை தொடர்ந்த காக்கை
எனை பார்த்து கண் சிமிட்டியது
பின் டேபிளில் இருந்த நீரை அருந்தி
ஆளுக்கொரு முத்தமிட்டு பிரிந்து சென்றன
எழுதி முடித்த கவிதையிலிருந்த பூனையும்
எழுதப்போகும் கவிதையிலிருக்கும் காகமும்.

•••
இந்தப் பகுதியில் தொடர்ந்து சிற்றிதழ்களை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. உங்கள் இதழ்களைப் பற்றிய தகவல்கள் அல்லது உங்கள் நண்பர்களின் புது இதழ்களை எனக்கு அனுப்புங்கள்.
sibichelvan@gmail.com
Advertisements

One thought on “சிற்றிதழ் அறிமுகம் 361 டிகிரி இலக்கிய இதழ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s