Home

வரலாறு என்பது ஒரு புனைவு. புனைவு என்பது ஒரு வரலாறு – 2

– சிபிச்செல்வன்

 

மகாராஜா., எனது பொழுதுபோக்கு ஏற்கனவே பதவியிலிருந்த அமைச்சர்களை நீக்கிவிட்டுப் புதிய அமைச்சர்களை நியமிப்பது. மறுநாள் அரசிதழ்களில் நீக்கப்பட்ட அமைச்சர்களின் பெயர்களைக் காண்பது எனக்குக் குதுகலம் தரும்

                                           முசோலினி

 

 

2

புபேந்தர் சிங் மகாராஜாவுன் அந்தப்புர லீலைகள், அவரின் பாலியல் ஆராய்ச்சிகள், அவருக்காக வேலை செய்த பிரெஞ்ச் மருத்துவர்கள் மற்றும் பிற நாட்டு ஆங்கில மருத்துவர்கள் அவர்கள் கண்டுபிடித்த மருந்துகள், அவற்றை அவர் நடைமுறைபடுத்திப் பார்த்த விதங்கள் ஆகியன வியப்பூட்டும் வகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

காமலீலைகளை அரங்கேற்ற வசதியாக தந்த்ராவை மாற்றியமைக்க முற்படும் மகாராஜாவும் அவருக்கும் அவர் கொடுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு மாற்றி அமைக்கவும் முயலும் ஒரு குரு.

குழு புணர்ச்சிக்கான பின்னணியைக் கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் வலிந்து திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டதையும், இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டவர்களுக்கு அந்த உண்மை இறுதிவரை தெரியாமல் பக்தி என்கிற போர்வையிலேயே அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்கிறது ஒரு பதிவு.

இவை எல்லாம் காலந்தோறும் அதிகாரத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு மக்களை எப்படி ஏமாற்றி வருகிறார்கள் என்பதற்கான சான்று. இந்த நடவடிக்கைகள் இன்றுவரை வேறு  வேறு வடிவங்களில் ஆட்சியாளர்களார்காளல் மாற்றி மாற்றி சூழலுக்கேற்ப அமைத்துக்கொள்ளும் அடிப்படைசூத்திரங்களின் பகுதிகாளாகவே அமைந்துள்ளன என்பதுதான் உண்மை. இன்றுவரை ஆட்சியாளர்கள்தான் மாறியுள்ளார்கள். மேலும் ஆட்சிமுறைதான் அதாவது பெயர்தான் மாறியுள்ளது . மற்றபடி அரச நடவடிக்கைகளில் மக்களை ஏமாற்றும் விதங்களில் ஆட்சியாளர்களள் அப்படியேதான் உள்ளார்கள்.

இந்தப் புத்தகத்தில் பல விசயங்களை நிகழ்கால அரசியல் வரலாற்றோடும் பொருத்திப் பார்க்க முடியும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம், புபேந்தர் சிங் முசோலினியைச் சந்தித்து உரையாடிபோது அவர் கூறிய வார்த்தைகள் அப்படியே இன்றைய நிகழ்கால அரசியல் நிகழ்வுகளோடு பொருத்திப் பார்க்கலாம். இதோ அந்தப் பகுதி  மகாராஜா எனது பொழுதுபோக்கு ஏற்கனவே பதவியிலிருந்த அமைச்சர்களை நீக்கிவிட்டுப் புதிய அமைச்சர்களை நியமிப்பது. மறுநாள் அரசிதழ்களில் நீக்கப்பட்ட அமைச்சர்களின் பெயர்களைக் காண்பது எனக்குக் குதுகலம் தரும்.

 

 

தமிழகத்தின் இன்றைய செய்தித்தாள்களில் அடிக்கடி அமைச்சர்களின் மாற்றங்களோடு நீங்கள் இந்த விஷயத்தை தொடர்புபடுத்திப் பார்த்ததால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல. இவற்றை சொன்னவர் முசோலினி. அவரோடு மற்றவர்களைப் பொருத்தி ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்வது அவரவர்களின் கற்பனை வளத்தைப் பொறுத்து அமையலாம். இவற்றிற்கு நான் பொறுப்பேற்க முடியாது.

இதுபோன்ற விஷயங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அல்லது எத்தனை தலைமுறைகளுக்குத் தொடர்கிறதோ அத்தனை தலைமுறைகளுக்கு இந்தப் புத்தகம் பொருந்தி வந்தால் அந்த எழுத்தாளரின் தீர்க்க தரிசனம்தான் காரணம். நிச்சயம் அவர் ஒரு நல்ல மந்திரியாக இருந்தது மட்டுமே காரணமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்பது என் மூடநம்பிக்கையாக அமையட்டும்.

 

 

தொடரும்…..

••

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s