Home

5

புபேந்தர் சிங் மரணப்படுக்கையில் படுத்துள்ளபோது அவரின் ஆணைப்படி ஒரு சாமியாரைத்தேடி காசியில் அலைவதும் பின் ஏதோ ஒரு சாமியாரைப்பிடித்து வந்து அவர் மாயஜாலங்களை நிகழ்த்திவிட்டு போகும் இடங்கள் புனைகதையின் உச்சம்போல இருக்கிறது. சாமியாரின் ஏமாற்று வேலையைக் கண்டுபிடித்த ஒரு காவல் அதிகாரியின் நாட் குறிப்பிலிருந்து பின்நாட்களில் இந்த உண்மையைக் கண்டுபிடித்ததாகவும். இது தெரிந்தவுடன் அந்த சாமியார் தப்பிப்போய்விட்டார் என்ற செய்தியை அறிந்த மகாராஜா அன்றிரவு இறந்து போய்விட்டார் என்று எழுதி அந்த அத்தியாயத்தை முடிப்பது அவருக்கு இதுபோன்ற விஷயங்களில் இருந்த கேலியுணர்வைப் பதிவுசெய்துள்ளார்.

இந்த நிகழ்வுகளைப் போன்றே ஏராளமான சம்பவங்கள் விறுவிறுப்பான சினிமா தன்மையில் சொல்லபப்பட்டுள்ளன. இப்போது சினிமாக்காரர்களுக்குத் தொழில்நுட்ப சாத்தியங்கள் இருப்பதால் இந்தக் காட்சிகளை எல்லாம் விளையாட்டுப்போலப்  படம்பிடித்து ரசிகர்களை மிரட்டி அவர்களின் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்ளலாம்

இந்தப் புத்தகத்தை ஒரு நெடும்பயணத்தின் துணையாகத்தான் எடுத்துக்கொண்டு போனேன். வழக்கம்போலப் பயணத்தில் காணும் காட்சிகளைக் கண்டு  ரசிக்கவிடாமல் , முழுக்கவனத்தையும் இந்தப்புத்தகத்தின் பக்கங்களிலேயே பதிந்து ஒரே மூச்சில் படித்துவிட முடிந்தது.

இந்த நுலை மொழிபெயர்த்திருக்கம் பொன்.சின்னத்தம்பியைக் குறித்தும்  ஒரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும். அவரின் மொழிபெயர்ப்பினைப் பற்றிச் சொல்வதென்றால் நல்ல சரளமான நடையில் வாசிப்பிற்குத் தடையேதுமின்றி அமைந்துள்ளதைக் குறிப்பிட வேண்டும். எந்த இடத்திலும் நம் முழிபிதுங்கவில்லை.ஆனால் அங்கங்கே பண்டுவம் பார்த்தல்.,ஆண்டை என்று மொழிபெயர்த்திருப்பதை மட்டும் அவர் கவனமாகத் தவிர்த்திருக்கலாம்.

39ஆம் பக்கத்தில் மாணிக்கவாசகரின் நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ அதற்கு நாயகமே என மொழிபெயர்ப்பாளரின் உணர்ச்சிவசப்படுதல் நேர்ந்திருக்கிறது,.போலவே 394 ஆம் பக்கத்தில் சுல்தான்கள் செய்த கொடுமைகளைப் பற்றிக் குறிப்பிட வந்தவர் கண்ணீர்த் திவலை கணிணித் திரையை மறைக்கிறது என எழுதியிருக்கிறார். நிச்சயமாக அந்தக்காலத்தில் கணிணி இருந்திருக்க வாய்ப்பில்லை. மூலத்தில் இல்லாத ஒன்றை மொழிபெயர்ப்பாளர் உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருப்பதாகவே நினைக்க தோன்றுகிறது. இ,துபோன்ற குறைகளைக் களைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

சமீப காலமாக சந்தியா பதிப்பகத்தார் பல நல்ல வரலாற்று புத்தகங்களைத் தமிழுக்கு வழங்கி வருகிறார்கள். குறிப்பாக அசோகர்.,அக்பர்,பாபர்,யுவான் சுவாங்கின் பயணக்குறிப்புகள் 3 தொகுதிகள்., பெர்னியரின் பயணக்குறிப்புகள் போன்ற பல நல்ல புத்தகங்களின் வரிசையின் தொடர்ச்சியாகவே இந்தப் புத்தகத்தையும் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு முக்கியமான புத்தகத்தைச் சிறந்த முறையில் அழகாகப் பதிப்பித்திருக்கிறார்கள். அவர்களின் வரலாற்று புத்தகங்களின் வரிசையில் மிகவும் குறிப்பிடத்தகுந்த புத்தகமாக நிச்சயம் சேர்க்கலாம்.

போலவே நல்ல புத்தகங்களைத் தேடிப் படிப்பவர்கள் கட்டயாமாக வாசிக்கலாம். இல்லையெனில் கொஞ்ச நாள் பொறுத்து ஒரு சினிமாவில் இடம் பெறும் காட்சிகளில் இந்தப் புத்தகத்தின் பக்கங்களிலிருக்கும் விஷயங்களைக் காட்சிகளாகப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு சர்வ நிச்சயமாகக் காத்திருக்கிறது.

( மகாராஜா – திவான் ஜர்மானி தாஸ்.,…- தமிழில் பொன் .சின்னத்த்ம்பி முருகேசன்-  பக்கங்கள் 432 – விலை ரூபாய் 300-  சந்தியா பதிப்பகம்.,சென்னை )

***

இந்தப் புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள

892 555 44 67

sibichelvan@gmail.com

sibichelvanm@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s