Home

 

 

 

இலக்கியச் சுற்றம் என்ற இந்தப் பகுதியில் இலக்கிய படைப்பாளிகள் எழுதும் படைப்புகளை த் தொடர்ந்து பிரசுரம் செய்யலாம். ஒரு இலக்கிய இணைய இதழ் தொடங்க திட்டமிருக்கிறது. அந்த எண்ணத்தின் வெள்ளோட்டமாக இந்தப் பகுதியில் படைப்பாளிகளின் கவிதைகள்,சிறுகதைகள்,நாவலின் பகுதிகள்,விமர்சனங்கள்,மதிப்புரைகள்,விவாதங்கள்,உரையாடல்கள் ,மொழிபெயர்ப்புகள் இப்படிப் பல்வேறு விஷயங்களுக்கும் இடம் கொடுப்பதாகத் திட்டம்.

நண்பர்களைத் தொடர்ந்து பங்கேற்ப அன்போடு அழைக்கிறேன்.

தொடர்புக்கு

சிபிச்செல்வன்

892 555 44 67

sibichelvan@gmail.com

sibichelvanm@gmail.com

***

பைசால் கவிதைகள்
கிணற்றடி
——–
என் உடலைத் தொட்டு தேய்த்திடும்போது
கால் வழுக்கி கீழே விழுந்தது சவர்க்காரம்.
அழுக்கு நீருக்குள் கிடந்து துடிக்கிறது
மணக்கும் மலை
மலையை எனது கைகளினால் தூக்கி கரை சேர்க்கிறேன்
அதன் தலையில் தூய நீர் வார்த்து
எனது உடலெங்கும் நடக்க விடுகிறேன்
மலை கரைந்து ஓடுகிறது எனதுடலெங்கும்
இப்போது நான்
மணக்கும் மலை
என்னை
அவளின் உடலெங்கும் நடக்கச் சொல்கிறாள்
என்னால் கரைய முடியாது
என்னிடமிருக்கும் மணத்தை யாருக்கும்
தானம் கொடுக்க முடியாது
எனக் கூறி
நான் அவளின் நனைந்த ஆடையின் பாதையால்
தப்பியோடுகிறேன்
மனதால் யாருக்கும் தீங்கு நினைக்காத
என்னைப் பிடித்து
கூட்டிலடைத்துவிட்டாள்
இன்று இரவு எலிகள் என் கற்பை அழிக்கப்போகின்ற
உண்மை எனக்குத் தெரியும்
பிரார்த்திக்கின்றேன்
என் பிரார்த்தனை உடன் நிறைவேறுகிறது
மீண்டும் அவள் என்னைக் கையில் எடுக்கின்றாள்
முகத்திற்கு அருகே கொண்டு வருகிறாள்
அவளின் கையில் இருந்த நான்
துள்ளி
கிணற்றுக்குள் பாய்ந்து உயிரை விடுகிறேன்.
———————
காற்றின் காதல்
மின் விசிறி காற்றை அலங்கோலப்படுத்துகின்றது
என் ஈரமான தலைமுடிக்குள்
வந்து ஒழிந்து கொண்ட காற்று
காதுக்குள் ஓரிரு ரகசியங்களைச் சொன்னது
நான் மின் விசிறிக்கு அருகாமையில்
இன்னும் அமர்ந்திருக்கின்றேன்
காற்றின் ரகசியங்களில் லயித்து
தண்ணீரின்; வீட்டில் இருக்கின்ற காலமெல்லாம்
நடுங்கி நடுங்கி உன் கூந்தலில் அமர்ந்துகொண்டு
குளிரின் கவிதைகள் எழுதிடுவேன்
நீ சூரியனின் குகைக்குள் நுழைகின்றபோது
உன்னைத் திட்டிக்கொண்டு பறந்திடுவேன்
கண்ணாடிக் கதவுக்குள்
நீ மூக்கை நுழைப்பாய்
அந்த நேரத்தில் கூட
உன் மீது இருக்கின்ற காதலை
சொல்ல முடியாமல் பயந்து, நாணி, உருகி
கண்ணாடியில் எழுதிக்காட்டுவேன்
கண்ணாடிக்கு வியர்த்துவிட்;டதாகச் சொல்லி
நீ மறைந்திடுவாய்
கதவைத் திறக்கும் இன்னுமொருவன்
கண்ணாடியின் கண்ணீர் என்பான்
என் காதலை.
——–
   எறும்புகள்
வீட்டுச் சுவரில் ஒரு பகுதி உலக வரைபடம் போல்
வெடித்திருக்கிறது
கால் நகங்களையும், கை நகங்களையும்
வெட்டி அலங்கரித்துவிட்டு
மழிதகட்டை
உலக வரைபடப் பாதையில் நிறுத்திவைப்பார் தந்தை
பீடித்துண்டுகள் பாதையின் நடுவே நிற்கும்
இன்று
யாருக்கும் எங்கும் செல்ல முடியவில்லை
எல்லோரும் திரும்புவோம்
என்று வரிசையின் முதலில் வந்த எறும்பு
தன்னைப் பின் தொடர்ந்து வந்த எல்லா எறும்புகளுக்கும்
தகவல் அனுப்புகிறது
என் தலையில் இருக்கிற தேங்காய் மூட்டையை
யாராவது கை மாறுங்கள்
என் தலையில் இருக்கிற அரிசி மூட்டையை
யாராவது கை மாறுங்கள்
தயவு செய்து கை மாறுங்கள்
என்று கூச்சலிடும்போது எறும்புகளின் அணிவகுப்பு
சற்று குழம்பிவிடுகிறது
தின்னையில் உறங்கிக்கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையின்
தூக்கம் கலைந்து குழந்தை அழுகிறது
தாய் பதறியடித்து ஓடிவருகிறாள்
மீண்டும் அணிவகுப்பை சீர் செய்துகொள்கின்றன எறும்புகள்
பாலைவனத்து ஒட்டகங்களின் நினைப்போடு
கண்கெட்டுப்போன எறும்பு கடிச்சிருக்கு
என் செல்லத்துக்கு
தாய் எறும்புகளைத் திட்டுகிறாள்
இந்த திட்டு மூட்டையை யாராவது கை மாறுங்கள்
என்றது ஒரு எறும்பு
(மழிதகடு என்றால் பிலேடு)
 •
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s