Home

இலக்கியச் சுற்றம் என்ற இந்தப் பகுதியில் இலக்கிய படைப்பாளிகள் எழுதும் படைப்புகளை த் தொடர்ந்து பிரசுரம் செய்யலாம். ஒரு இலக்கிய இணைய இதழ் தொடங்க திட்டமிருக்கிறது. அந்த எண்ணத்தின் வெள்ளோட்டமாக இந்தப் பகுதியில் படைப்பாளிகளின் கவிதைகள்,சிறுகதைகள்,நாவலின் பகுதிகள்,விமர்சனங்கள்,மதிப்புரைகள்,விவாதங்கள்,உரையாடல்கள் ,மொழிபெயர்ப்புகள் இப்படிப் பல்வேறு விஷயங்களுக்கும் இடம் கொடுப்பதாகத் திட்டம்.

நண்பர்களைத் தொடர்ந்து பங்கேற்ப அன்போடு அழைக்கிறேன்.

தொடர்புக்கு

சிபிச்செல்வன்

892 555 44 67

sibichelvan@gmail.com

sibichelvanm@gmail.com

வேல் கண்ணன்  கவிதைகள்

1. உறைந்த ஒரு நொடியில்
கோப்பையை நிரப்பி தருகிறேன்
மேசை மீதமர்ந்து இருக்கிறாய்
இடக்கால் மீது வலக்கால் அமைத்து
ஒருக்களித்தவாறே

மதுவின் மேலாகவும் உனது பார்வை

உனது உதடுநாவை தீண்டிய
திரவத்தை
சில நொடிகளுக்கு பின்பே அருந்துகிறேன்
ஈரத்துடன் ஒரு முறை முத்தமிடுகிறேன்
கால்களுக்கு  இடையே இறுக்கி கொள்கிறாய்
பின்னும் முத்த ரசம் பருகிறேன்

கீழ்உதடு  கவ்வி மார்சாய்த்து மடி கிடக்கையில்
கோப்பை இறுதி மிடறு சிதறி வண்ணக்குமிழ்
எழுகின்றன எனதெங்கும்.

2 .  சுடர் வெம்மை 

அப்பொழுது நான் மலையுடன் பேசினேன்
இறுதியாக நீ மலையை கடந்ததால்அப்பொழுது நான் கடலுடன்  பேசினேன்
இறுதியாக நீ கடலில் கலந்ததால்அப்பொழுது நான் மரத்துடன் பேசினேன்
இறுதியாக நீ பழங்களில் பசியாறியதால்

எப்பொழுதோ நீ பகிர்ந்த வெம்மையினால்
தனித்திருக்கிறேன்

இறுதியாக நான் ஒரே ஒரு சுடருடன்




பின்னூட்டமொன்றை இடுக