Home

பின் நவீன கவிதைகள் -19  1/2  வரிகள் ( பத்தொன்பதரை வரிகள் )

Post Modern Bangala Poetry 2001

தொகுப்பிலிருந்து ஆங்கிலம் வழியாகத் தமிழில் :  சிபிச்செல்வன்

 

 

 

 

 

 

 

 

*

தமிழில் முதன் முதலாக பின் நவீன கவிதைகளை மொழிபெயர்த்தவர் சிபிச்செல்வன்.2002 /2003 ஆம் ஆண்டுகளில் இந்தக் கவிதைகள் தமிழில் முதலில் மொழி பெயர்க்கப்பட்டன..தமிழில் பின் நவினத்துவம் பற்றி ஏராளமான கட்டுரைகள்,நாவல்கள்,சிறுகதைகள் மொழிபெயர்ப்புகள்,விவாதங்கள்,உரையாடல்கள் நடந்திருக்கின்றன, ஆனால் தமிழில் பின் நவின கவிதைகளை யாரும் அறிமுகம் செய்திருக்கவில்லை.

இப்போது தமிழில் எழுதப்படுகிற பல கவிதைகளை இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பாதித்திருக்கின்றன என்பது காலத்தின் உண்மை.

இந்தக் கவிதையின் ஆங்கில வடிவ புத்தகத்தை சென்னையில் ஒரு கோடை மதிய வெயிலில் வேர்வை சொட்டச் சொட்ட நனைந்து எல்.ஐ.சி கட்டடத்திற்கு பின்புறத்திலுள்ள சாலையில் ஒரு பழைய புத்தகக் கடையில் தேடிய போது ஒரு புதையல் போல தட்டுப்பட்டது.இந்தப் புத்தகத்தை நான் வாசித்துக்கொண்டிருந்த போது எழுத்தாளரும் பன்முக ஆசிரியமான எம்.ஜி.சுரேஷ் பார்த்து விட்டு மொழிபெயர்க்க உற்சாகப்படுத்தினார்.

தமிழ்ச்சூழலில் நிலவும் மொழிபெயர்ப்பு பற்றிய அவநம்பிக்கைகள் என்னை மொழிபெயர்க்க விடாமல் மனத்தடை செய்தது. ஆனால் எம்.ஜி.சுரேஷ்   தொடர்ந்து உற்சாகப்படுத்தி மொழிபெயர்ப்பையும் சரி பார்த்து கொடுத்து அவரின் பன்முக சிற்றேட்டிலும் பிரசுரித்தார்.அவருக்கும் அப்போது இந்தக் கவிதைகளை பாராட்டிய வாசகர்களுக்கும் எழுத்தாள நண்பர்களுக்கும் நன்றி.

இப்போது இக்கவிதைகளைத் தொடர்ந்து மறுபிரசுரம் செய்ய கேட்டுக் கொண்ட கவிஞர் றியாஸ் குரானாவிற்கும் நன்றி.

***

19  1/2  வரிகள் ( பத்தொன்பதரை வரிகள் )

மூலம் :  வங்காளம் :  உத்பல்குமார் பாசு

ஆங்கிலம் வழி :  ருத்ர கின்ஸ்க்

சிறியது, சக்கரம் பொருத்தப்பட்டது, மூன்று கால்கள், மடக்கி வைக்கத்தக்கது, சுற்றிலும் எளிதாக நகர்த்தக்கூடியது . அறைக்கு அறை , முற்றத்தில், படுக்கையறையில், தள்ளுவதைப்போல, மத்தியளவில், கொஞ்சம் பெரியது, விலை அதிகம், பள்ளிக்கு எடுத்துச் செல்லும்  பைக்குள் மடக்கி வைக்கும்படியாக , வழங்கப்பட்டிருந்தது, கடைக்கு அல்லது மெயிலில், அனேகமாக ஒன்றாகச் சேர்க்கப்பட்டிருந்தது, தனித்திறமை இதற்கு வேண்டியதில்லை, கொஞ்சமிருந்தால் போதும் , பெண்கள்கூட எளிதில் செய்யலாம்,பேருந்தில் எடுத்துச் செல்ல எளிதாக அட்டைப் பெட்டிபொல,சேர்க்கப்பட்டவற்றை வீட்டில் திறந்து பார்க்க, நிலையும், அளவும் பெட்டியயின் மீது எழுதப்பட்டுள்ளன. நீலமும் வெள்ளையுமாக நிறங்கள், ( சிவப்பு  நிறத்தில் உள்ளது விரைவில் சந்தைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது ) ஒரு சிறுமியின் புகைப்படம், புன்னகைத்து, எப்போதோ  , எங்கேயோ பார்த்திருக்கிறேன். லிரில் சோப்பில் , முழுமையாகப் பொருந்துகிறது. மகிழ்ச்சியில் இரண்டு கரங்களையும் உயர்த்துகிறாள் ,அப்பெண், அந்தப் பெட்டி, படம், வேறென்ன, பொங்கி வழிகிற,பாதி உறிஞ்சப்பட்ட ஒயின் தம்ளர், அனேகமாகக் குளிர்பானம்,கழுத்து  வலிக்க திரும்பினால் இன்னொரு புதிய படம்,  மருந்து மாத்திரைகள், இரவு விளக்கு, மணியடிக்கிற கடிகாரம் ,அந்தப் பெட்டியின் மறுமுனை கொஞ்சம் மடங்கி இருந்தது, வரோலி ( மும்பை ) , மிக அழகான பெண் தன் படிப்பில் கவனமாக இருக்கிறாள், ,பயிற்சி நுல்களில் , கணக்கிடுகிறாள், சரியான விடைக்காக மகிழ்கிறாள்,அந்தப் படத்திலிருந்து விலகி, அதாவது அந்தப் பெட்டியின் நான்காவது பக்கத்தில், உற்பத்தியாளர் பாபா சாகிப் அரோராவின் மீசையுடன் கூடிய ஓவியம், கடவுளுக்குப் பயப்படுகிற, ஓம் எண்டர்பிரைசஸ், மும்பை ( வரோலி ) , இந்திய பிளாஸ்டிக் வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பில் முன்னோடி, பாராட்டுக்கும் மரியாதைக்குமுரிய மனிதன், வாங்குவோம், தொந்தரவுக்குப் பொறுத்தருள்க, சாகிப் இந்தச் சிறிய குடியிருப்பில் இன்னொரு மேஜையும் இருக்கிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s