Home

பின் நவீன கவிதைகள் –  தமிழில் :  சிபிச்செல்வன்


****

 

 

 

 

 

 

எதிர்பொருள்

( அடகு வைக்கப்பட்டது :  கமல் சக்ரவர்த்திக்கு )

மூலம் :  வங்காளம் : நீல் அஞ்சன் சட்டோபாத்யாய

ஆங்கிலம் வழி :  நீல் அஞ்சன் சட்டோபாத்யாய

 

மின்னணு எதிர்பொருள் நேர் ஆக்கமின்மை, ஹிந்துஸ்தான் பாகிஸ்தான்

நேர் ஆக்கமின்மை எதிர்பொருள் மின்னணு. பாகிஸ்தான் ஹிந்துஸ்தான்

கௌரவர் எதிர்பொருள் பாண்டவர்., விகர்ணா உத்கர்ணா

பாண்டவர் எதிர்பொருள் கௌரவர், உத்கர்ணா விகர்ணா

மின்னணு  –  எதிர்பொருள், நிலை – தேர்தல்

ஜரதுஷ்டிரனுக்கு எதிர்பொருள் எங்கே? இல்லை

(மேலும்) அவன் சாம்பலை யாரும் கண்டுபிடிக்கவில்லை  – அல்லது

ஆகையால், கழுதைதான் ராஜா ( இல்லையா  !   )

மேலும், டானிடம்தான் சாவி இருக்கிறது. ( டான்ஜீன்  !   )

உருவத்துக்கு எதிர்பொருள் எதிர் –

வளைவின் மத்தியில் ( கண்ணாடி வைத்திருக்கிறீர்களா ? )

என் கண்ணாடியில் ” b ”  ” d “ யாகத் தெரிகிறது ( உன் கண்ணாடியிலும்கூட)

ஆகையால் ( என் ) ரொட்டியை உருவாக்கு

(மேலும்) கேளடி உன் வெண்ணெய்யை

( எல்லாவற்றிற்கும் என் எதிர்ப்பைக் காட்டுகிறேன்  –

( மேலும் ) கவிஞர்க்கு, ஒரு எதிர்க்கவிஞர் ) ( இல்லையா ! )

இவையெல்லாம் விளையாட்டுச் சிந்தனைகள்

உலக கையெழுத்து தினம்

ஆனால் எங்கே அந்த நாள் ? முக்கியமான நாள் ?

ஆகையால், ( முதலில் பணியில் குறை ) :  உனக்கு சலுகை தொடர்கிறது

(இரண்டாவது பணி ) சரி, உலக கற்போர் தினம்

நல்வரவு

நன்றி கே. சி . ( பேராசிரியர் நட்டுகளும் போல்ட்டுகளும் சக்கரங்களும் )

நினைவுப்பரிசை அனுப்பியிருந்தீர்கள் உங்கள் புத்தகத்தில் – ‘  என் கையெழுத்து  ‘

அதே தேதியிட்டு

(ஆனால் நீங்கள் பெற்றதற்கு இணையானதைக் கொடுத்துள்ளீர்களா ? )

8 – ஆம் தேதி செப்டம்பர் 2000 – காட்சி மீது கேள்வி )

(பத்திரிகையாளர்கள் பரிசுப்பொருட்களை வாங்கிக்கொள்ளக்கூடாது ( அது

நெறிமுறை சாராதது )

பி.இ.ஐ. ஏற்றுக்கொண்டது., ஆனால் கவிஞனுக்கு .ஏது நெறிமுறை ? )

வாழ்ந்து கொண்டிருப்பது அர்த்தமுள்ளது, ஜெய ஜெகதீஷ்  ஹரே

Post Modern Bangala Poetry 2001

தொகுப்பிலிருந்து ஆங்கிலம் வழியாகத் தமிழில் :  சிபிச்செல்வன்.

**

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s