Home

 

 

 

 

 

 

 

 

கனவுகளின் வாக்கியம் 


 

                                   பைசால் கவிதை

 



ஒரு இரவு
இரு கண்ணுக்குள்ளும்
இருபது கனவுகள் வந்து தங்கின
அப்போதுதான் எனக்குத் தெரியும்
மனதுக்குள் முழைத்த தாவரம்
அதன் கிளைகளை கண்களுக்குள் பரப்பியிருப்பது
இதற்கு முன் இந்த இருபது கனவுகளும்
எங்கிருந்தன
இரைகளை எப்படித் தேடிக் கண்டுபிடித்தன
எத்தனையாவது வாயினால் கொத்தித் தின்றன
பத்துக் கனவுகள் மாத்திரமே
இரையை கொத்தித் தின்னும்
பத்துக் கனவுகள்
கைகளினால் அள்ளித் தின்னும்
எனும் தகவல்களை
கண்விழித்து படித்துக் கொண்டிருக்கிறேன்
அந்தப் புத்தகம் இருபது பக்கங்களை உள்ளடக்கியிருந்தன
ஒரு மணித்தியாலத்திற்குப் பின்
வெற்றுத் தாள்கள் கொண்ட புத்தகமே
என் கையில் இருந்தது
பத்துக் கனவுகள் மேகத்தை இடித்து நொறுக்கிக் கொண்டு
என்னுடன் பறக்கும்
பத்துக் கனவுகள் பூமி வெடித்து விரியும்படி
என்னுடன் நடக்கும்
தாவரம் தன் கிளைகளை
மெல்ல மெல்ல வளர்த்துக் கொண்டேயிருந்தது
கனவுகளின் எண்ணிக்கையில் இரண்டு குறையும்
இரண்டு அதிகரிக்கும்
என்பதை
கட்டிலில் பலகை சத்தம் போடுகிறபோது
அறிந்து கொள்வேன்
பறக்கும் போதும்
நடக்கும் போதும் மாயமாக மறைந்தவைகளைத் தவிர
இரண்டு கனவுகள் மிச்சமிருக்கின்றன
ஒரு கனவினுடைய காலிரண்டும் மறைந்து கொண்டுபோகின்றன
முழுவதும் மறைந்து விட்டன
காலையில் கடைசிக் கனவுடன் கண் விழித்தேன்
அந்தக் கனவில் வந்தவன்
என்னைச் சந்திப்பதற்காக வாசலில் நிற்கின்றான்
 .
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s