Home

நேர்காணல்: ஆண்டோ பீட்டர்

சந்திப்பு: சிபிச்செல்வன்

“கணித்தமிழைப் பரவலாக்க வேண்டும்”

 

 

 

 

 

 

பகுதி II

எந்தப் படைப்பாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும் அது நிறைய பேரைப் போய்ச் சேர வேண்டும். அமுதம் எழுத்துருக்களை ‘வெப்’பில் இலவசமாகக் கொடுக்கும்போது நிறையப் பேரைச் சென்றடைந்தது. உலகத்தில் எதுவும் இலவசம் கிடையாது. இந்தப் பணிகளை இலவசம் என்று சொல்ல முடியாது, பயன்படணும். ஒரு கம்ப்யூட்டர் வீட்டிலிருந்தால்கூட நான்கைந்து பேர் பயன்படுத்துகிறார்கள். இன்றும் கணினியில் தமிழைப் பயன்படுத்த முடியும் என்பதை ஒரு அதிர்ச்சியோடுதான் பார்க்கிறார்கள். அப்படி இருப்பவர்களை நாம் எப்படி போய்ச் சேரப்போகிறோம் என்பதை நினைத்து நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்காகவே ‘தமிழும் கணிப்பொறியும்’ என்ற நூலை அறிமுகப்படுத்தி எழுதியிருக்கிறேன். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படுகிற வகையில் இந்நூலை அமைத்திருக்கிறேன். இப்போது இளைஞர்கள் ஒரு புது நிறுவனத்தைத் துவக்குகிறார்கள் என்றால் பத்து சதவிகிதம்தான் தமிழ் பேசுகிறவர்களாக இருக்கிறார்கள்.

தமிழ் வெப் சைட்கள் failure ஆவதற்கான காரணங்கள்?

1998, 99இல் கணினித் துறையில் பெரியதொரு அலையடித்தது. DotCom Wave என்று சொல்வார்கள். எல்லாப் பெரிய நிறுவனங்களும் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு, விளம்பரம் செய்தார்கள். இணையத்தை இணையத்தின் மூலமாகத்தான் வெற்றி பெறச்செய்ய முடியும். Physicalஆக வெற்றிபெறச் செய்ய முடியாது. MSN, Yahoo, Google, Hotmail போன்றவற்றில் இவர்கள் விளம்பரங்கள் செய்திருக்கிறார்கள். தமிழ் இணையங்களுக்கு ஆங்கில இணையங்களுக்கு நிகராக ஹிட்ஸோ, பிரவுசிங்கோ கிடைக்க வாய்ப்பேயில்லை. எங்கள் தமிழ் சினிமா.காமை 84 நாடுகளில் படிக்கிறார்கள். அதில் 12 நாடுகளில் 2 பேர் அல்லது 4 பேர் படிக்கிறார்கள். அதை எப்படி நாம் கூட்ட முடியும்? அங்கே தமிழர்கள் இருந்தால்தானே எண்ணிக்கையைக் கூட்ட முடியும். தீவோ, தீபகற்பமோ, பள்ளத்தாக்கோ அங்கேயுள்ளவனுக்குத் தேவையான தகவல்தான் அவனுக்கு முக்கியம். தமிழக அரசியலைப்பற்றி அவனுக்கு அக்கறை இருக்காது. தமிழகத்தைப் பற்றிய தகவல்கள்தான் தேவை. நோக்கமில்லாமல் வந்த இணையதளங்கள் எப்படி வெற்றிபெற முடியும்? தமிழுக்கென்று இன்றுவரை விளையாட்டு, ஆன்மீகம், மருத்துவத்தளங்கள் கிடையாது. அயல்நாடுகளில் வாழ்கிற பலர் ஆன்மீகம் பற்றிதான் அதிகம் படிக்கிறார்கள். ஆனால் ஆன்மீகத்திற்கு எதிர்வினைகள் வராது. நான் ஒரு முறை இலங்கைக்குப் போயிருந்தபோது ஒரு காட்டுப் பகுதியில் சீதைக்குக் கோயில் இருந்ததைப் பார்த்தேன். ‘சீதை அம்மன்’ கோயில் இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. எனக்�!
க ஆச்சரியமாக இருந்தது. ராவணன் சீதையைக் கடத்திப் போனபோதுச் சீதை அங்குள்ள அருவியில்தான் குளித்தாள் என்றார்கள். இந்தச் செய்திகளைத் தளத்தில் போட்டால்தான் அயல்நாடுகளில் படிப்பார்கள். நாளிதழ்கள், வார இதழ்கள், டி.வி. இவை அனைத்தையும் விட்டுவிட்டு நம்மிடம் அவர்கள் வர வேண்டுமென்றால் சில சிறப்பம்சங்கள் இருக்க வேண்டும். இல்லையென்றால் கஷ்டம். யாரும் வரமாட்டார்கள். சினிமாவிற்கென்று 300 இணைய இதழ்கள் இப்போது இருக்கின்றன. நாங்கள் எப்படி வெற்றி பெற்றோம்? +2, S.S.L.C. ரிசல்ட் போட்டால் அந்த இரண்டு நாளுக்கு மட்டுமே ஹிட்ஸ் நிறைய வரும். தென்றல் காற்றுக்கு மதிப்பு அதிகம். புயல் காற்று எப்போதாவது ஒரு முறை வருவது.

வருமானம் இல்லாததால்தான் இணையதளங்கள் சரிவைச் சந்தித்தது இல்லையா?

ஆமாம். நாங்கள் தமிழ் சினிமா டாட்.காம் நடத்துகிறோமென்றால் அதைச் சார்ந்து பல இணையதளங்கள் நடத்துகிறோம். பல இணையதளங்கள் நடத்துகிற பொறுப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதிலிருந்து எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. எங்கள் தளத்தில் கொச்சைத் தமிழில்தான் எழுதுகிறோம். இளைஞர்களை மனதில் வைத்து நடத்துகிறோம். அவர்களுக்கு வேண்டிய தகவல்களைக் கொடுக்க வேண்டும்.

 

 

 
தமிழ் மென்பொருட்களுக்கான தளமே கிடையாது. உலகத்தில் உள்ள அனைத்து இணையங்களையும் சுவிட்சர்லாந்து கல்யாண சுந்தரம் தொகுத்துப் போட்டார். நா. கண்ணன் செய்வது பெரிய வேலை. எங்கள் இணையதளத்திலும் உலகத்திலுள்ள அனைத்து இணையதளங்களையும் இணைக்கிறோம்.B.E. முதல் ஆண்டு படிக்கும்போதே 200, 300 மாணவர்கள் Projectகள் செய்ய ஆரம்பித்துவிட்டால் அதுதான் தமிழுக்குப் பெரிய பலமாக அமையும். எத்தனை பெரிய பணிகளை செய்ய முடியும்! ஆனால் இவர்கள் Pay-roll, inventory controll போன்றவைகளையே இன்னும் செய்துகொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட புராஜக்டுகள் செய்ய ஆரம்பித்துவிட்டால் கல்யாண சுந்தரமோ, கண்ணனோ, ஆண்டோ பீட்டரோ, நீங்களோ ஒன்றுமேயில்லை. கல்யாண சுந்தரத்தின் ‘புராஜக்ட் மதுரை’ என்பது எவ்வளவு பெரிய திட்டம். அது ஒரு தனியார் நடத்துவதேயில்லை. ஒரு பெரிய குழுவே செய்ய வேண்டிய வேலை அது.

தமிழ் இணைய மாநாடுகள் எவ்வளவு தூரத்திற்கு நமக்குப் பயன்படுகிறது? தமிழ்ப் பிரதிநிதிகளிடையே கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்கிறது. நமது மென்பொருள்கள் பரப்புவதற்கு, டெக்னாலஜியைப் பரிமாறிக்கொள்வதற்குப் பயன்படுகிறது. ஜெர்மனியில் நூற்றுக்கு 4 பேர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் இணையத்தின் வழியாகச் சந்தித்துக்கொள்ள முடிகிறது. அமெரிக்காவில் சிலிக்கான்வேலியில் (Silican Valley) மைக்ரோ சாப்ட், சன், ஆரக்கிள் எல்லாம் இருக்கின்றன. அங்கே ஒரு தமிழ் கணினி மாநாடு நடந்தால் தமிழுக்கு ஒரு value கிடைக்கும் (தமிழை உலக அரங்கில் பல ஊர்களில் செய்யும்போது) தமிழுக்கு உரிய கவனம் கிடைக்கும்.

டெக்னாலாஜியைச் சார்ந்திருக்கும் மொழிதான் உயர்ந்திருக்கும். அதைச் சார்ந்திருக்காத எந்த மொழியும் இருக்காது. 1652 மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன. அதில் 18 மொழிகள்தான் அரசால் அங்கீகாரம் பெற்றவை. மிகப் பழமையான மொழி தமிழ். எந்தத் தொழில்நுட்பத்தையும் ஏற்றுக்கொள்ளும் தன்மைகளோடு உள்ளது. இளைஞர்கள் தமிழுக்கு ஊட்டம் கொடுக்க வேண்டும். இப்போது தமிழுக்கு முதியோர்கள்தான் ஊக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இளைஞன் செய்தால் அதற்கு நல்ல விளைவுகள் இருக்கும். 50 வருட இடைவெளிக்குப் பிறகு கம்ப்யூட்டரால் தமிழ் மோகம் இளைஞர்களிடம் கூடியுள்ளது. சிதைந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. கணினி, இணையம், இ.மெயில் வாயிலாக எதிர்காலத்தில் தமிழின் பயன்பாட்டு எல்லைகள் விரியும் வாய்ப்பிருக்கிறது. இப்போது தமிழையே எழுதத் தயங்குகிற தலைமுறையில், அவன் அப்பா கோவில்பட்டி, ஈரோடு, சேலம் எங்கு இருந்தாலும் ஒரு இ-மெயில் அனுப்புகிறான். தங்கள் உறவினர்களோடு கட்டாயம் தமிழில் உரையாடும் சூழலே உள்ளது. இதற்காகவே தமிழில் எழுதவும் படிக்கவும் வேண்டியிருக்கிறது. எந்த ப்ரௌசிங் சென்டரிலும் தமிழில் மெயில் அனுப்புகிறவர்களைப் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டில் இருப்பவர்களைவிட இலங்கைத் தமிழர்கள், புலம்பெயர்ந்தத் தமிழர்களுக்கு தமிழ் மீது ஆர்வமும், பற்றும் அதிகமாக இருக்கிறதே?

அதில் சந்தேகம் கிடையாது. இணைய தளங்களை இலங்கைத் தமிழர்களே நடத்துகிறார்கள். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் எங்கே சென்றாலும் அவர்கள்தான் இருக்கிறார்கள். மற்ற இணைய தளங்களில் நல்ல தகவல்கள் வந்தாலும் அதற்கு இணைப்பு கொடுத்துப் போடுகிறார்கள். தமிழ்நாதம், முழக்கம் போன்ற இணைய தளங்கள் இப்படி நல்ல விஷயங்களைச் செய்கின்றன.

 

தமிழ்நாட்டில் இணையதளங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது? அச்சில் வந்தால் அதை உடனே படிக்கிறார்கள். இணையத்திலும் அதேபோன்று படிக்கிறார்களா?

தமிழ்நாட்டில் நாம் எங்கே போனாலும் தமிழ் பேச, எழுத வாய்ப்பிருக்கிறது. தமிழ் நாட்டில் இந்த வாய்ப்பு எளிதில் கிடைப்பதில்லை. தமிழ் நமக்குப் புழக்கத்தில் உள்ள மொழி. தமிழ் நாட்டில் இணையங்களைத் தேவைப்படும் தகவல்களுக்காகவே பார்க்கிறார்கள். இங்கே ப்ரௌசிங் சென்டரில் ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாய் என்றிருப்பதால் பார்ப்பதில்லை என்கிறார்கள். 200, 300 ரூபாய் கொடுத்து கேபிள் டி.வி. பார்க்கிறார்கள். அதனால் பணம் இவர்களுக்குப் பிரச்சினையில்லை. அதன் தேவையை இன்னும் உணரவில்லை. தேவையேற்பட்டால் செலவைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள்.

இந்தப் பிரச்சினையைச் சரிசெய்வது சம்பந்தமாக நீங்கள் ஏதாவது முயற்சி செய்தீர்களா?

� சம்பந்தமாகச் சில பணிகளைச் செய்திருக்கிறோம். வேறு எந்த முயற்சிகளும் செய்யவில்லை. அது அவ்வளவு சுலபமான வேலை கிடையாது. பெரிய குழுவினர் செய்ய வேண்டிய வேலை. (திருக்குறளுக்கு ஆத்திச்சூடி, திருக்குறள் கொண்டு வந்த அனுபவம் . . .?)

படங்கள் பார்த்துக் கதை சொல்வது, கேட்பது என்பது நமக்குச் சுகமான அனுபவம். ஆனால், நம் குழந்தைகளுக்கு மூன்றாம் வகுப்பிற்குப் பிறகு இந்த முறையை நிறுத்திவிடுகிறோம். அவர்களுக்காகப் படங்களுடன் கூடிய மல்ட்டி மீடியாவில் ஆத்திச்சூடி, திருக்குறளை ஒவியங்கள் போட்டு நாங்கள் கொடுத்தோம். திருக்குறள் இல்லாத பல்கலைக்கழகங்களே கிடையாது. திருக்குறளை சி.டியாகக் கொண்டுவரும் தேவை இருப்பதைப் புரிந்துகொண்டோம். அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. நாம் செய்வதைவிட அவர்கள் செய்தால் அது உடனடியாக எல்லா மாவட்டங்களுக்கும், போய்ச் சேர்ந்துவிடும். பயன்படுத்த முடியும்.

தமிழில் கார்ட்டூன் படங்களே கிடையாது. குழந்தைகளுக்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? அவர்கள்தான் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள். அவர்களுக்கு நாம் நிறைய செய்ய வேண்டும்.

தமிழில் இணைய தளங்கள் . . .

TAM/TAB, TSCII அல்லது அது சார்ந்திருக்கும் எழுத்துக்கள் மாற்றம் சரியாகாது. குமுதம் TAM Font பயன்படுத்துகிறார்கள்.
எங்கள் அலுவலகத்திலும் TAM Fontஐயே பயன்படுத்துகிறோம். பல அலுவலகங்களில் TAB Fontஐப் பயன்படுத்துகிறார்கள். முரசு
அஞ்சல் TSCII Fonts பயன்படுத்துகிறார்கள். Standardization செய்த fontsஐ 18 நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துகிறது.
முரசு மென்பொருளிலும் TAM Fonts இருக்கிறது. மக்களைப் பயன்படுத்துவதற்காகவே 10 ரூபாய் புத்தகங்கள் போட்டு மக்களை போய்
சேர்வதற்கு முயற்சிக்கிறோம். 10 ரூபாய்க்கு இன்று எதுவுமே கிடைக்காது. ஆனால் ஒரு புத்தகம் உபயோகமாகக் கிடைக்கும்படி செய்தேன்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் 15,0000 காப்பி விற்றிருக்கிறது.

 

 

 

 

•••

Advertisements

3 thoughts on “கணிணி நேர்காணல்: ஆண்டோ பீட்டர் சந்திப்பு: சிபிச்செல்வன்

  1. Pingback: கணித்தமிழைப் பரவலாக்க வேண்டும்” | Cybersimman's Blog

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s